கோப்புப்படம் 
இந்தியா

துல்லிய தாக்குதல் விடியோ: ஆதாரத்துக்காக என்றால் தாக்குதல் நடத்திய போதே ஏன் வெளியிடவில்லை? - மாயாவதி

துல்லிய தாக்குதலின் விடியோவை பொது தளத்தில் வெளியிட்டது பாஜகவின், மக்களை திசை திருப்பும் முயற்சி என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள காஷ்மீர் பகுதிக்கு சென்று இந்தியா ராணுவ வீரர்கள் கடந்த செப்டம்பர் 2016-இல் துல்லிய தாக்குதலை நடத்தினர். அந்த விடியோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) பொது தளங்களில் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான விமரிசனங்களை வைத்தது. அதற்கு பாஜகவும் பதிலளித்தது. 

இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இன்று இதே விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 

"தங்களது தோல்விகளில் இருந்து 2019-க்கு முன்பாக மக்களை திசை திருப்பும் முயற்சியில் இந்த (பாஜக) அரசு துல்லிய தாக்குதல் விடியோவை வெளியிட்டுள்ளது. அப்படி அவர்கள் ஆதாரத்துக்காக வெளியிட வேண்டும் என்ற நோக்கம் என்றால் தாக்குதல் நடத்திய போதே ஏன் வெளியிடவில்லை?" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT