மோசடி பட்டியலால் போர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடியின் பெயர் இந்து ஆண்டுக்கான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடியின் பெயர் இந்து ஆண்டுக்கான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரராக போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
இது குறித்து போர்ப்ஸ் கூறுகையில், இந்தியாவின் நீரவ் மோடி மற்றும் பபா ஜான்ஸ் பிட்சா நிர்வாகி ஜான் ஸ்னேட்டர் உள்ளிட்ட 4 பேர் இந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதே சமயம் இந்த ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் அதிகமானோர் இடம்பெற்றுள்ளனர். 119 இந்திய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18 பேர் அதிகமாக இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.