இந்தியா

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை தீர்மானம்! 

DIN

பெங்களூரு: கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க அளவிலானோர் பின்பற்றி வரும் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கர்நாடகாவில் சிவலிங்கத்தினை வழிபட்டு வரும் லிங்காயத் எனபப்டும் வீரசைவ சமூகத்திற்கு தனி மத அடையாளம் தேவை என பல ஆண்டுகளாக அதனை பின்பற்றுபவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. புத்த, சீக்கிய மதங்களை போல் லிங்காயத், வீரசைவ சமூகம் உலக அளவில் ஒரு மதமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும் என்றுஅவர்கள் தொடர்ந்துவலியுறுத்தி வந்தனர்.

இதற்காக கர்நாடக மாநில அரசானது நாகமோகன் என்பவரது தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்தது. தற்பொழுது அந்த கமிட்டி தாக்கல் செய்துள்ள அறிகையின் அடிப்படைசியில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. 

கர்நாடக அரசியலில் நெடுங்காலமாக மிகவும் முக்கியமான விவகாரமாக இருந்து வரும் லிங்காயத் விவகாரத்தில் முக்கிய நகர்வை காங்கிரஸ் அரசு தற்பொழுது எடுத்து உள்ளது.

கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எப்பொழுதும் லிங்காயத் சமூக மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தற்பொழுது லிங்காயத் சமூக மக்களை ஈர்க்கும் வகையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இந்த றிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

SCROLL FOR NEXT