இந்தியா

ஆதார் வழியாக 100% அடையாள சரிபார்ப்பு  சாத்தியமல்ல!: ஒப்புக் கொண்ட இந்திய அடையாள ஆணையம்! 

DIN

புதுதில்லி: ஆதார் அட்டையில் பதிந்துள்ள தகவல்கள் வழியாக ஒருவரது 100% அடையாள சரிபார்ப்பு  என்பது சாத்தியமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதார் திட்டத்தின் சட்டப்பூர்வ தன்மை குறித்த வழக்கானது, உச்ச நீதின்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கினை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

அந்த அமர்வின் முன்பு வெள்ளியன்று ஆஜராகி ஆதார் திட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் அஜய் பூஷன் பாண்டேவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வெள்ளியன்று ஆஜராகி அவர் அளித்த தகவல்கள் பின்வருமாறு:

ஆதார் ஆணையத்தில் உள்ள தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவை '2048 பிட் என்க்ரிப்ஷன்' என்னும் பாதுகாப்பு முறையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இவை வழக்கமாக நிதி தொடர்பான தகவல்களை பாதுகாக்கும் ''8 பிட் என்க்ரிப்ஷன்'  முறையினை விட பன்மடங்கு பாதுகாப்பானவை. இதன் ஒரு சிறு பகுதியில் உள்ள தகவல்களை எடுப்பதென்றாலே, உலகின் அதிவேகமான கணிப்பொறிக்கு, இந்த அண்டத்தின் வயதினை விட அதிக காலம் தேவைப்படும்.

ஆனால் ஆதார் அட்டையில் பதிந்துள்ள கைவிரல் ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் வழியாக ஒருவரது 100% அடையாள சரிபார்ப்பு  என்பது சாத்தியமல்ல. அவ்வாறு ஒருவரது ஆதார் அட்டை தகவல்கள் சரியாகப் பொருந்தாவிடில் அது தொடர்பாக என்ன செய்வது என்று நிறுவன ரீதியான வழிகள் எதுவும் இதுவரை வகுக்கப்படவில்லை.

அதே சமயம் ஒருவரது ஆதார் அட்டை தகவல்கள், அவரது நேரடியான பயோமெட்ரிக் தகவல்களுடன் பொருந்திப் போகவில்லை என்பதற்காக, அவருக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் மறுக்கப்படக்  கூடாது. அவ்வாறு ஒரு சூழ்நிலை உண்டானால் அத்தகைய நபர்களுக்கு எனத் தனியாக ஒரு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். பின்னர் அவரது தகவல்களை மறுபதிவு செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.

அத்துடன் வரும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் முகம் வழி அடையாள சரிபார்ப்பு முறையினை மேற்கொள்ள ஆணையம் தீர்மானத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT