முகப்பு
இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக விடுமுறை சுற்றுலா சலுகை

ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக மத்திய அரசின் விடுமுறை சுற்றுலா சலுகை (எல்டிசி) அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:05 AM
பகிர்:

ரயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக மத்திய அரசின் விடுமுறை சுற்றுலா சலுகை (எல்டிசி) அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பணியாளர் பயிற்சி, பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, உள்ள விதிகளின்படி ரயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் விடுமுறை சுற்றுலா சலுகையைப் பெற முடியாது. ஏனெனில், அவர்களுக்கு ரயிலில் இலவசமாக பயணம் செய்வதற்கான சலுகை ஏற்கெனவே இருப்பதன் காரணத்தால் இந்த சலுகை அளிக்கப்படாமல் இருந்தது. எனினும், இப்போது 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களுக்கும் விடுமுறை சுற்றுப் பயணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் பயிற்சி மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறுகையில், ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை சுற்றுலா சலுகை அளிப்பது குறித்து ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசித்து முடிவெடுத்தோம். அதன்படி ரயில்வே ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு செலவில் சுற்றுலா சென்று வர முடியும். அவர்கள் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில் அவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள இலவச ரயில் பயணச் சலுகையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.