மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மே மாதம் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, இந்தத் தகவலை மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் ஏ.கே. சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மே மாதம் 1ஆம் தேதி, 3ஆம் தேதி, 5ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். இதில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 8ஆம் தேதி எண்ணப்படும்' என்றார்.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தயார் நிலை குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.