கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷனில் நடந்த வித்தியாசமான 'கட்டிப்பிடி' போராட்டம்
கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷன் கோச் ஒன்றுக்குள் கட்டிபிடித்துக் கொண்ட காதல் ஜோடி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வித்தியாசமான முறையில் 'கட்டிப்பிடி' போராட்டம் நடைபெற்றது.
இந்தியாகொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷனில் நடந்த வித்தியாசமான 'கட்டிப்பிடி' போராட்டம்
கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷன் கோச் ஒன்றுக்குள் கட்டிபிடித்துக் கொண்ட காதல் ஜோடி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வித்தியாசமான முறையில் 'கட்டிப்பிடி' போராட்டம் நடைபெற்றது.
கொல்கத்தா: கொல்கத்தா மெட்ரோ ஸ்டேஷன் கோச் ஒன்றுக்குள் கட்டிபிடித்துக் கொண்ட காதல் ஜோடி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வித்தியாசமான முறையில் 'கட்டிப்பிடி' போராட்டம் நடைபெற்றது.
கொல்கத்தாவின் டம் டம் மெட்ரோ ஸ்டேஷனில் திங்களன்று இரவு மெட்ரோ கோச்சுக்குள் காதல் ஜோடி ஒன்று ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டது. இதனைப் பிடிக்காமல் அங்கிருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் அவர்களைத் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
இந்நிலையில் இந்த சம்பத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தா டோலிகஞ்ச் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதனன்று வித்தியாசமான முறையில் 'கட்டிப்பிடி' போராட்டம் நடைபெற்றது.
ராகுல் சக்ரபோர்த்தி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கு திரண்டனர். ஒருவருக்கு ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாத அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், 'நாங்கள் எந்த கட்சியையோ அமைப்பையோ சார்ந்தவர்கள் அல்ல; இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்துள்ள சாதாரண கொல்கத்தா குடிமக்கள். வெறுப்புச் செயல்களுக்குப் பதிலாக அன்பினை பரப்ப விரும்புவர்கள்' என்று தெரிவித்தார்