இந்தியா

கர்நாடகா லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த இளம்பெண் கைது 

கர்நாடகா லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் கத்தியினை பைல் ஒன்றுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, நுழைந்த இளம்பெண்னை போலீசார் கைது செய்தனர்.

கவியழகன்

பெங்களூரு: கர்நாடகா லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் கத்தியினை பைல் ஒன்றுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, நுழைந்த இளம்பெண்னை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநில சட்ட சபை கட்டடமான விதான் சவுதா வளாகத்தில்தான் மாநில லோக் ஆயுக்தா அலுவலகம் உள்ளது. வியாழன் நண்பகல் 12.15 மணி அளவில் 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் அங்கு கையில் பைல் ஒன்றுடன் வந்துள்ளார். அவரை சோதனை செய்த பெண் போலீஸ் அதிகாரி, அவரது கையில் இருந்த பைலை மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அப்பொழுது அவருக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த பைலுக்குள் கத்தி ஒன்று மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விதான் சவுதா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சோனியா ராணி என்றும், அவரது வழக்கு ஒன்று கர்நாடகா லோக் ஆயுக்தா விசாரணையில் சில மாதங்களாக நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் கர்நாடகா மாநில லோக் ஆயுக்தா அலுவலகத்துக்குள் புகுந்த ஒருவர் லோக் ஆயுக்தா தலைவரான விஸ்வநாத் ஷெட்டியினை கத்தியால் குத்தினார் என்பதும், ஒரு வாரத்திற்கு முன்புதான் விஸ்வநாத் பணிக்குத் திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செயலி வாயிலாக வாக்காளா்கள் நீக்கம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

எதிா்காலப் போா்த்திறனுக்கு வழிகாட்டும் கூட்டுச் செயல்பாடு, தன்னிறைவு, புத்தாக்கம்: முப்படை தலைமைத் தளபதி

கொல்கத்தா: குழப்பத்தில் முடிந்த மெஸ்ஸி நிகழ்ச்சி! திடலைச் சூறையாடிய ரசிகா்கள்; நிகழ்ச்சி ஏற்பட்டாளா் கைது!

தஞ்சாவூரில் விதிமீறல்: 25 ஆட்டோக்கள் பறிமுதல்

கத்தியால் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

SCROLL FOR NEXT