இந்தியா

காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ: கர்நாடக அரசியலில் கூடும் பரபரப்பு  

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ வெளியானதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

DIN

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ வெளியானதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், மஜத. கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை சனிக்கிழமையன்று நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசும் புதிய ஆடியோ வெளியானதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கொச்சி நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் முதல்வர் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை காங்கிரஸ் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

அந்த ஆடியோவில் பாட்டீலுக்கு அமைச்சர் பதவியுடன் நீங்கள் கேட்டதை தருகிறோம் என்று எடியூரப்பா உறுதி கூறுகிறார். அத்துடன் மேலும் 3 பேரை அழைத்து வாருங்கள் என்றும் அவர் கூறுகிறார். இந்த ஆடியோவின் காரணமாக கர்நாடக அரசியல் சூழல் மேலும் சூடு பிடித்துள்ளது. 

முன்னதாக ராய்ச்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பாஜக தலைவர் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவானது வெள்ளியன்று வெளியானது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2 அப்டேட் - வெற்றிமாறன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு

அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல்!

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் விருப்பம்!

17 ஆண்டுகளில் முதல்முறை... தஜிகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

SCROLL FOR NEXT