இந்தியா

ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகர பரிசோதனை 

DIN

பாலசோர்: உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றான இந்தியாவின் பிரமோஸ் ஒடிசா சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.

உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணைகளில் ஒன்றாக இந்தியாவின் பிரமோஸ் உருவாக்கப்பட்டுள்ளது.  சாதாரணமாக இதன் வாழ்நாள் 10 வருடங்கள் ஆகும். அதற்பொழுது அது 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக ஏவுகணை தயாரிப்புக்கு ஆகும் செலவு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணையின் வாழ்நாள் நீட்டிப்பிற்கு பின் இந்தியாவில் முதன்முறையாக சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள சண்டிபூர் கடற்கரையில் திங்களன்று வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.   

முதல் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரமோஸ் ஏவுகணை குழு மற்றும் டி.ஆர்.டி.ஓ. ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT