இந்தியா

கர்நாடக முதல்வராக நாளை மாலை பதவியேற்கிறார் குமாரசாமி

DIN

கர்நாடக மாநில முதல்வராக வரும் புதன்கிழமை (மே 23) மாலை 4.30 மணிக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தலைவர் குமாரசாமி பதவியேற்கவுள்ளார்.
பெங்களூரு விதான் சௌதாவில் நடக்கும் விழாவில், குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். பதவியேற்பு விழாவையொட்டி, தர்மசாலா, சிருங்கேரி ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை சென்று, கோவிலில் வழிபாடு நடத்தவும், மதத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT