இந்தியா

ஆந்திரா காங்கிரஸ் பொதுச் செயலாளரானார் கேரள முன்னாள் முதல்வர்

கேரளாவின் முன்னாள் முதல்வர் உமன் சாண்டி ஆந்திராவின் பொதுச் செயலாளராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.

DIN

கேரளாவின் முன்னாள் முதல்வர் உமன் சாண்டியை ஆந்திர பிரதேசத்தின் பொதுச் செயலாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியமித்தது. மேலும், மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிகோபார் தீவின் பொதுச் செயலாளராக கௌரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம், அந்தமான் நிகோபார் தீவின் பொதுச் செயலாளர்களாக இருந்து வந்த திக்விஜய சிங் மற்றும் சிபி ஜோஷியின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டியது.  

இந்த புதிய பொறுப்பு கிடைத்ததை அடுத்து உமன் சாண்டி பேசியதாவது,

"எனது அனுபவத்தால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். ஆந்திராவில் காங்கிரஸை திரும்ப கொண்டுவதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றார். 

மத்திய பிரதேசத்தில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட திக்விஜய சிங் மிக முக்கிய பங்காற்றுவார் என்று காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT