முகப்பு
இந்தியா

என்.டி. ராமராவுக்கு பாரத ரத்னா: சந்திரபாபு நாயுடு கோரிக்கை 

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:09 PM
பகிர்:

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மறக்கவியலா நாயகனாக, தனி சகாப்தமாக விளங்கியவர் என்.டி. ராமராவ். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து 'தெலுங்கு தேசம்' என்ற கட்சியினைத் துவக்கி ஆந்திராவில் அரியணை ஏறியவர். அவரது மருமகன்தான் ஆந்திராவின் தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு ஆவார்.

இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் சிறந்து விளங்கிய மக்கள் தலைவரான ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →