இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிராக்டர் பேரணி

Raghavendran

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டிராக்டர் பேரணியை செவ்வாய்கிழமை நடத்தினர்.

நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக (கர்நாடக தேர்தலுக்குப் பின்னர்) பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், பலதரப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சம்ரலாவில் விவசாயிகள் அனைவரும் டிராக்டர் பேரணி நடத்தினர். பாரதிய கிஸாண் சங்கம் நடத்திய இப்பேரணி தொடர்பாக அதன் தலைவர் பல்பீர் சிங் ரெஜ்வால் கூறியதாவது:

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு டிராக்டருக்கு சராசரியாக 10 லிட்டர் டீசல் செலவாகும். தற்போது தினசரி ஏற்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.400 முதல் ரூ.700 வரை கூடுதலாக செலவாகிறது. தினமும் இதுபோன்ற விலை உயர்வை விவசாயிகளால் தாங்க இயலாது.

இந்த விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் அனைவரும் சம்ரலாவில் அவரவர் டிராக்டர்களுடன் ஒன்று கூடி பேரணி நடத்தியுள்ளோம். இந்த டிராக்டர்களின் சாவியை அரசு நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளோம்.

நாடு முழுவதும் நடைபெறும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு மத்திய அரசுதான் முழுக் காரணம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT