முகப்பு
இந்தியா

வடமாநிலங்களில் இடி, மின்னலுக்கு 34 பேர் சாவு

உத்தர பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி, மின்னலுக்கு நேற்று மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:10 PM
பகிர்:

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் பிஹார், ஜார்கண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் நேற்று (திங்கள்கிழமை) மட்டும் 34 பேர் இடி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

உயிரிழந்த 34 பேரில் பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தலா 12 பேர், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் ஆவர். முன்னதாக, 28ம் தேதி 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதே போன்று மே மாத தொடக்கத்திலும் 100 பேர் இடி மின்னலுக்கு பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.