நாராயணசாமிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (புதன்கிழமை) 72-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையடுத்து, பிரதமர் மோடி ட்விட்டரில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
"புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ ஆசி பெறுவார்." என்றார்.
Advertisement
Advertisement