முகப்பு
இந்தியா

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டு நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் வீரர் உட்பட 4 பேர் பலி

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சட்டீஸ்கரில், மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 4 பேர் பலியாகினர்.

Updated On : 8 நவம்பர், 2018 at 3:24 PM
பகிர்:

ராய்பூர்: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சட்டீஸ்கரில், மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 4 பேர் பலியாகினர்.

சிஐஎஸ்எஃப் படை வாகனத்தை குறி வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் எதிர்பாராதவிதமாக சிறிய பேருந்து சிக்கியதில் படை வீரர் ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். 2 வீரர்கள் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை சட்டீஸ்கர் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Advertisement

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு வாரங்களாக சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.