இந்தியா

தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இணைந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி 

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.      

IANS

புது தில்லி: அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.      

ராஜஸ்தான் மாநில காவல்துறையில் டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஹரீஷ் மீனா. பின்னர் பாஜகவில் இணைந்த அவர், தவுஸா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில் அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.   

டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் 

தில்லியில் புதனன்று நடந்த இணைப்பு விழாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட்  மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் முன்னிலையில், ஹரீஷ் மீனா காங்கிரசில் இணைந்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT