இந்தியா

நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் 

DIN

புது தில்லி: நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சிந்து நதியின் கிளை ஆறுகளான ஜீலம், ரவி, பியாஸ், சட்லஜ் மற்றும் செனாப் ஆகிய ஐந்து நதிகள் பாய்வதால், ஐந்து  நதிகள் பாயும் நிலம் எனும் அர்த்தத்தில் பஞ்சாப் என அம்மாநிலம் பெயர் பெற்றுள்ளது. 

இந்த ஐந்து நதிகளில் பியாஸ், சட்லஜ் ஆகிய ஆறுகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அதிகளவில் மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அத்துடன் இந்த ஆறுகளை சுத்தப்படுத்த பஞ்சாப் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் கூறப்பட்டது. 

இந்த வழக்குகளை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகையை 2 வாரத்திற்குள் பஞ்சாப் அரசு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT