இந்தியா

நாடு முழுவதும் விரைவில் 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.களுக்கு மூடு விழா? : அதிர்ச்சித் தகவல்

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

புது தில்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம்கள் செயல்பட்டு வருகின்றன . இவைகள் அனைத்தும் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக  ஏ.டி.எம்களை நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பயன்பாட்டில் உள்ள ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் வங்கிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இதனால் தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது. 

மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான செலவினம் கூடி வருவதால் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் பலவகை கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் வங்கிகளும் கொண்டிருக்கவில்லை. 

இதனை வங்கிகள் விரைவில் சரி செய்யாத நிலையில் பெரிய அளவிலான ஏ.டி.எம்.களின்  மூடலுக்குத்தான் இது வழி வகுக்கும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT