முகப்பு
இந்தியா

17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் வேண்டும்?: சிவசேனா கேள்வி 

நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

Updated On : 23 நவம்பர், 2018 at 6:30 PM
பகிர்:

மும்பை: நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் ராமர் கோவிலை கட்ட விரைவில் அவசரச்சட்டம் இயற்றபட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்து அமைப்புக்கள் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.  சிவசேனாவும் தொடந்து இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறது.

Advertisement

இந்நிலையில் நாங்கள்  17 நிமிடங்களில் பாபர் மசூதியை  இடித்தோம்; ஆனால் ராமர் கோவிலுக்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

நாங்கள் பாபர் மசூதியை வெறும் 17 நிமிடங்களில் தரைமட்டமாக்கி விட்டோம். ஆனால் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு சட்டம் இயற்ற இன்னும் எவ்வளவு காலம் வேண்டும்? கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்த தேசத்தில் சுதந்திரமாகச் சுற்ற முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக ராமர் கோவில் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.