இந்தியா

காஷ்மீரில் ரப்பர் குண்டு பாய்ந்து பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், கலவரக்காரர்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினர் நடத்திய, துப்பாக்கி சூட்டில், ரப்பர் 

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், கலவரக்காரர்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினர் நடத்திய, துப்பாக்கி சூட்டில், ரப்பர் குண்டு பாய்ந்த 20 மாத பெண் குழந்தை பார்வைக்காக மருத்துவமனையில் போராடி வருவது பார்ப்பவர்களின் மனங்களையும் கலங்கவைத்துள்ளது. 

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலவரக்காரர்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினர் நடத்திய, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைகுண்டு, ரப்பர் குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில், வீட்டில் இருந்த 20 மாத பெண் குழந்தையின் இடது கண்ணில் பாய்ந்த ரப்பர் குண்டால் பலத்த காயம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் பார்வை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் வகைவிரித்ததை அடுத்து பெற்ற மனம் பிள்ளையின் நிலை அறிந்த தாய் செய்வதறியாது தவித்து வருகிறார்.
 
இதுகுறித்து குழந்தையின் தாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வெளியே மோதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது போது எனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில்தான் இருந்தனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே வீசப்பட்ட கண்ணீர் புகைகுண்டால் எனது 5 வயது மகன் மூச்சு விடமுடியாமல் மிகவும் சிரமப்பட்டான். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக வீட்டின் ககதவை திறந்தபோது, வெளியே நின்றுகொண்டிருந்த 3 பாதுகாப்பு ஊழியர்கள் வீசிய ரப்பர் குண்டு என் குழந்தையின் கண்ணில் பட்டு துடித்தாள். எனக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். எனது மகன் தற்போது வீட்டில்தான் உள்ளான். அவனுக்கு எனஅன ஆனது என தெரியவில்லை. அவனை யாராவது சென்று பாருங்கள் என்று கூறிய தாய், தனக்கு என்ன நடந்தது என்ன என்பதைக் கூட அறிந்துகொள்ளும் வயதில் அவள் இல்லை. அவள் கடந்து வரும் ஒவ்வொரு இக்கட்டான தருணத்தையும் அவளது தாயான என்னாள் மட்டுமே உணர முடியும் என கதறி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

SCROLL FOR NEXT