இந்தியா

கஜா நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு கட்டணம் கிடையாது: ரயில்வே  நிர்வாகம் அறிவிப்பு 

கஜா புயல் பாதிப்புக்கு உள்ளன மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு, ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

DIN

புது தில்லி: கஜா புயல் பாதிப்புக்கு உள்ளன மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு, ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு, ரயிலில் சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். 

இதன் தொடர்ச்சியாக கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயிலில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் கிடையாது.  

தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு டிச.10 வரை இந்த விலக்கு வழங்கப்படுகிறது என மத்திய ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT