ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார். ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில் அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜலோர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அனுமதியின்றி சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள். இது பாஜக தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சிதான் அமையும். இதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அதன்மூலம் வளர்ச்சிக்கான பாதையில் செல்கிறது.
காங்கிரஸ் கட்சி எந்த திட்டமும் இன்றி இத்தேர்தலை சந்திக்கிறது. இங்கு ஆட்சியமைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி கனவு காண்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையும் கிடையாது, கொள்கையும் கிடையாது. அதேபோன்று வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மத்தியில் நிச்சயம் பாஜக ஆட்சி மீண்டும் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.