சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே வெடி விபத்து: 22 பேர் பலி
சீனாவில் இரசாயன தொழிற்சாலை ஒன்றின் அருகே நடந்த வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பெய்ஜிங்: சீனாவில் இரசாயன தொழிற்சாலை ஒன்றின் அருகே நடந்த வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெபே மாகாணத்தில், ஜான்ஜியகோ என்ற இடத்தில் இரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகே குறிப்பிட்ட தொழிற்சாலைகக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் ஊழியர்களின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
புதனன்று இந்த பகுதியில், இரசாயனத்துடன் நின்று கொண்டிருந்த லாரி ஒன்று , திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்தன. அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.