முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதிகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM
கோப்புப்படம்
பகிர்:


காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதிகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

புல்வாமா மாவட்டம் சர்ஷாலி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை தொடர்ந்து இன்று காலை அந்த கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டபடி பாதுகாப்புப்படையினர் முன்னேறி சென்றனர். துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து 2 பயங்கரவாதிகள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொலை செய்த தீவிரவாதி நவீத் ஜத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து தற்போது 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.