ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்: முன்னாள் முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம்
தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதீர்கள் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கினார்.
மைசூரு: தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாதீர்கள் என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் இளைய தலைமுறைக்கு அறிவுரை வழங்கினார்.
புற்றுநோய் பரிசோதனை முகாமைத் துவக்கி வைத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, தான் எப்படி சிகரெட்டுக்கு அடிமையாகி இருந்தேன் என்பதையும், ஒரு நாள் அதனை விட்டுவிட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் வரைப் பிடிப்பேன். ஒரு முறை எனது நண்பன் வெளிநாட்டில் இருந்து ஒரு பெட்டி சிகரெட்டுகளை வாங்கி வந்தான். அது முழுவதையும் ஒரேநாளில் பிடித்துத் தள்ளிவிட்டேன். அப்போதுதான் எனக்கு குற்றஉணர்ச்சி ஏற்பட்டது. அன்றைய தினமே சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். சுமார் 31 ஆண்டுகள் ஆகிவிட்டது சிகரெட் பிடிப்பதை விட்டு. இப்போதெல்லாம் சிகரெட் புகையைக் கூட என்னால் சமாளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
Advertisement
பொதுவாகவே தீய பழக்கவழக்கங்களுக்கு இளைஞர்கள் எளிதில் அடிமையாகிவிடுவார்கள். ஆனால் அப்படி யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒரு வேளை புகைத்துக் கொண்டிருந்தால், புற்றுநோய் உருவாகும் முன்பே அதனை நிறுத்தி விடுங்கள் என்று தெரிவித்தார்.