கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா?: கேள்வி எழுப்பும் சபாநாயகர்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஞ்சி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 'லோக் மந்தன்' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியாதவது:
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் காலவரையற்ற இட ஒதுக்கீடு என்பது சரியாக இருக்குமா என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்திய அரசியலை அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவின் தலைவரான அம்பேத்கர் கூட, இடஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டால் போதும் என்றுதான் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அதற்குள் நாட்டில் ஒரு சரிசமமான வளர்ச்சி உருவாகும் என்றவர் கணித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது வரை கூட நாடாளுமன்றத்தில் உள்ளவர்களால் இட ஒதுக்கீடு என்பது 10 வருடங்களுக்கு ஒரு முறை அடுத்த 10 வருடங்களுக்கும் நீட்டிக்கபப்டுகிறது.
இட ஒதுக்கீடு என்பது மட்டுமே மக்களை மேம்படுத்தவோ அல்லது நாட்டின் சமூக பொருளாதார நிலையையோ மாற்றி விட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.