முகப்பு
இந்தியா

சமூகத்தில் பகைமையைத் தூண்டுகிறார்: கேஜரிவால் மீது தில்லியில் வழக்குப் பதிவு   

சமூகத்தில் பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது.  

Updated On : 2 அக்டோபர், 2018 at 3:26 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:27 PM

புது தில்லி: சமூகத்தில் பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளது.  

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில் அவர் கூறி இருந்தாவது:

இந்துக்களுக்காக உழைக்கும் கட்சி என்று தன்னை பாஜக அழைத்துக் கொள்கிறது. ஆனால்  அது அரசியலுக்கான நடவடிக்கையாக உள்ளது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்காக அனைத்து இந்துக்களையும் கொல்வது குறித்து அவர்கள் இரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள். 

Advertisement

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். 

அவரது இந்த பதிவினையடுத்து பாஜகவின் அஸ்வினி உபாத்யாய, சமூகத்தில் பகைமையைத் தூண்டும் விதத்தில் நடந்து கொள்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இருந்து,  தற்போது பாஜகவில் இணைந்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது புகாரினை அடுத்து, அரவிந்த் கேஜரிவால் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.