இந்தியா

கேரள பேராயர் ஃபிராங்கோ முலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு

கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான பேராயர் ஃபிராங்கோ முலக்கலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

IANS

கொச்சி: கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதான பேராயர் ஃபிராங்கோ முலக்கலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் ஃபிராங்கோ முலக்கலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

செப்டம்பர் 21ம் தேதி கைது செய்யப்பட்ட ஃபிராங்கோ, 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, 24ம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த ஃபிராங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் கேரள காவல்துறையினர் கடந்த ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதனிடையே, தனது செல்வாக்கு, பண பலத்தை பயன்படுத்தி, வழக்கிலிருந்து தப்பிக்க ஃபிராங்கோ முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரி, இதுதொடர்பாக வாடிகனுக்கான இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பொறுப்பில் இருந்து ஃபிராங்கோ தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர் விசாரணை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

முன்னாள் திரைப்பட இயக்குநா் ஏ.பி.நாகராஜன் பிறந்தநாள் விழா

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT