இந்தியா

12 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2044 கோடி போனஸ் அறிவிப்பு 

IANS

புது தில்லி: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்கள்ளுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய ரயில்வேயில் பணியாற்றும் 11.91 லட்சம்  'நான் கெசட்டட்' (அரசிதழ் பதிவில் வராத)   ஊழியர்களுக்கு ரூ.2044 கோடி போனஸ் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 78 நாள் ஊதியமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. 

அதன்படி இந்தப் பிரிவின்  கீழ் வரும் ஒவ்வொருவருக்கும் ரூ. 17951 ஊக்கத் தொகையாக கிடைக்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT