இந்தியா

சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்து ஆச்சரியப்படுத்திய சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் திங்களன்று சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

UNI

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் திங்களன்று சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.  

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் வைத்திலிங்கம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் திங்களன்று வீட்டில் இருந்து சட்டப்பேரவைக்கு தனது அதிகாரப்பூர்வ  வாகனத்தைப் பயன்படுத்தாமல் சைக்கிளிலேயே வந்திருக்கிறார். அவருடன் அவரது கட்சியினர் சிலரும் சைக்கிளில் வந்துள்ளார்கள். 

செய்தியாளர்கள் அவரிடம் சைக்கிளில் வந்ததற்கு காரணம் என்ன என்று வினவினார்கள். அதற்கு பதிலளித்த அவர், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில் இது ஒரு சிக்கன நடவடிக்கை என்று கூறியதுடன், சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT