இந்தியா

பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இந்திய ராணுவ வீரர் கைது  

பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புதனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  

DIN

மீரட்: பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புதனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   

உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் காஞ்சன் சிங். மீரட்டில் உள்ள ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் 10 வருடங்கள் பணிபுரிந்து வந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக இவரின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து அவர் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவுடன் "இரகசியமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த  தகவல்களை" அவர் பகிர்ந்து கொண்டதாக விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் காஞ்சன் சிங் புதனன்று காலையில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததாக உத்தரபிரதேச போலீஸ்  தெரிவித்துள்ளது.

முன்னதாக இதுபோல ஒரு குற்றச்சாட்டின் காரணமாக மஹாரஷ்ஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT