இந்தியா

காஷ்மீரில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு  

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் விடுத்துள்ள முழு அடைப்பு வேண்டுகோளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதைக்கப்பட்டுள்ளது. 

DIN

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாதிகள் விடுத்துள்ள முழு அடைப்பு வேண்டுகோளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதைக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பதே கதால் பகுதியில் புதனன்று நடைபெற்ற என்கவுண்டரில்  லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் மெராஜூத்  மற்றும் அவரது உதவியாளர் பைஸ் அகமது மற்றும் ரியாஸ் அகமது ஆகிய மூவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இதனைக் கண்டித்து காஷ்மீரில் புதன்கிழமை முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.  ஸ்ரீநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. 

ஸ்ரீநகரில் ஆங்காங்கே தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கியதை காண முடிந்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரமுல்லா மற்றும் பனிவால் இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT