இந்தியா

சமுதாய பிரிவினையைத் தூண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: சபரிமலை விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு 

DIN

நாக்பூர்: சமுதாய பிரிவினையைத் தூண்டும் வகையில் சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்தில்  இந்த ஆண்டுக்கான விஜய தசமி விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு  பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

மத்தியில் அரசாங்கங்கள் மாற்றியமைந்தாலும் நமது எல்லைகள் மீதான தாக்குதலை அண்டை நாடுகள் நிறுத்துவதில்லை. 

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுவழியிலான வழிபாட்டு முறைகளை எதிர்க்கிறது. அதேசமயம் முற்றுமுழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது 

விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும்.  

இவ்வாறு அவர் பேசியுள்ளார், 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT