இந்தியா

மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து

மும்பையில் புதனன்று மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது. 

DIN

மும்பை: மும்பையில் புதனன்று மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது. 

மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதியில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவாஜி ஸ்மரக் காம்ப்ளெக்ஸ் பகுதியில் அரபிக் கடலில், சத்ரபதி சிவாஜி நினைவகம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. 

அதற்கான பூஜைக்காக புதன் மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் என மொத்தம் 40 பேர் ஒரு படகில் குறிப்பிட்ட பகுதி நோக்கி  பயணம் செய்தார்கள். சுமார் 04.15 மணியளவில் அந்தப் படகானது எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது.   

ஆனால் உடனடியாக இந்திய கடற்படை, கடற்கரையோர காவல் மற்றும் இதர அரசு நிறுவனங்கள் இணைந்து, இரண்டு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT