இந்தியா

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட ஆய்வு: நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு அனுமதி

DIN


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த நிபந்தனைகளுடன் மத்திய அரசு கேரளாவுக்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை, ஏழு நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

புதிய அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சையை அளித்துள்ளது.

அதே சமயம், மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வைத் தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்றும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும், தமிழக அரசின் அனுமதி அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT