சபரிமலை ஐயப்பன் கோயிலில் போராட்டம்: 440 வழக்குகள்; 1,400 பேர் கைது
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எர்ணாகுளத்தில் மட்டும் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து வரும் நாட்களில் கைது எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். காவல்துறையினரையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.