முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தை புரட்டிப் போட்ட கன மழை: வீடுகளுக்குள் வெள்ளம் 

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 2:47 PM
பகிர்:


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஜென்மாஷ்டமி கொண்டாட முடியாமல், உத்தரப்பிரதேச மக்கள் தவித்து வருகிறார்கள்.

இன்று உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Advertisement

பழைய லக்னௌ பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.