இந்தியா

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து அடுத்த விலை உயர்வுக்குத் தயாராகுங்கள் ரயில் பயணிகளே!

DIN


பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம், ரயில் பயணிகளுக்கு அடுத்த விலை உயர்வும் மத்திய அரசால் பரிசளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் பிறப்பித்திருக்கும் புதிய அறிவிப்பில், ரயில்களில் விற்பனையாகும் டீ மற்றும் காபி விலை ரூ.7ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரயில்களில் விற்பனையாகும் உணவுப் பொருட்களுக்கான விலையை மாற்றியமைத்திருக்கும் ரயில்வே தற்போது டீ, காபி விலையையும் உயர்த்தியுள்ளது.

ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை வெண்டார்கள் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உணவுக்கான பில் வழங்கப்படவில்லை என்றால், உணவை இலவாசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தரமான உணவை, சரியான விலையில் வழங்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது உணவு தரம் மற்றும் அதிகக் கட்டணம் தொடர்பாக ரயில் பயணிகள் அவ்வப்போது புகார் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT