முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: குளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் 6 மீனவர்கள் பலி

அஸ்ஸாம் மாநிலம் நகோன் மாவட்டம் கடோவால் பகுதியில் உள்ள குளம் ஒன்றில், உயர் அழுத்த மின் கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததில், 6 மீனவர்கள் பலியாகினர்.

Updated On : 21 செப்டம்பர், 2018 at 11:40 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:19 PM


குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் நகோன் மாவட்டம் கடோவால் பகுதியில் உள்ள குளம் ஒன்றில், உயர் அழுத்த மின் கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததில், 6 மீனவர்கள் பலியாகினர்.

ஒரு மீனவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து, குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்ததைப் பார்த்த உள்ளூர் மக்கள் மின்சார வாரியத்துக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மின்சாரத்தைத் துண்டித்தனர். 

Advertisement

அப்போது குளத்தில் இறங்கிய சில மீனவர்கள் மீன்களைப் பிடித்து வர முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது திடீரென மின் அழுத்தக் கம்பிக்கு மின்சாரம் பாய்ந்ததால், குளம் முழுவதும் மின்சாரம் பாய்ந்து மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.