ஆபாச தகவல்கள் அடங்கிய 4,000 இணையதளங்களுக்கு பூட்டுப்போட்டது சீனா
ஆபாச தகவல்கள் உட்பட சமூகத்தை சீரழிக்கும் விஷயங்களை உள்ளடக்கிய சுமார் 4 ஆயிரம் இணையதளங்களை சீனா முடக்கியுள்ளது.
பெய்ஜிங்: ஆபாச தகவல்கள் உட்பட சமூகத்தை சீரழிக்கும் விஷயங்களை உள்ளடக்கிய சுமார் 4 ஆயிரம் இணையதளங்களை சீனா முடக்கியுள்ளது.
இணையத்தை சுத்தப்படுத்துவது தொடர்பாக கடந்த 3 மாத காலம் நடத்தப்பட்ட பிரசாரத்தையொட்டி, வன்முறையைத் தூண்டும் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணையதளங்களை மூட சீனா நடவடிக்கை எடுத்தது.
எதிர்காலத்தில், ஆரோக்கியமான, தூய்மையான இணையதள இலக்கியத்தை உருவாக்கவே சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதேப்போன்ற நடவடிக்கையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் சுமார் 22,000 ஆபாச இணையதளங்களை சீனா மூடக்கியது குறிப்பிடத்தக்கது.