இந்தியா

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டார் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினமணி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு கசியவிட்டதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
 தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
 ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு வழங்கப்பட மாட்டாது என்பதை பிரதமர் மோடி தெரிந்து கொண்டு, அந்த தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவித்திருக்க வேண்டும். அதன் பிறகு, அனில் அம்பானியின் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில், ரகசிய காப்பு பிரமாணத்தை மோடி மீறிவிட்டார்.
 எனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பிரதமர், மெüனமாக இருக்கிறார். அவருக்குப் பதிலாக பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பதிலளிக்கிறார்கள். எனவே, எனது குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடியே பதிலளிக்க வேண்டும் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
 ராகுல் வலியுறுத்தல்: இதனிடையே, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அரசு தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT