பெங்களூருவில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூருவில் 6.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு பெங்களூரில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை வரை பெங்களூர் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும், சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும் மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement