முகப்பு
இந்தியா

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாகும்!

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Updated On : 28 செப்டம்பர், 2018 at 3:17 PM
பகிர்:


புது தில்லி: 2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்போன் சந்தை குறித்து ஆய்வுகள் நடத்தி வரும் கௌண்டர்பார்ட் நடத்திய ஆய்வில், நடுத்தர விலை கொண்ட அதாவது ரூ.14 ஆயிரம் முதல் ரூ.29,000 வரையிலான ஸ்மார்ட்போன்கள் ஆண்டுக்கு ஆண்டு விலையேறி அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீத விலை உயர்வை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் எதிர்காலம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

Advertisement

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய செல்போன் சந்தையாக விளங்குவது இந்தியா. இங்கு தற்போது 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.