நவீன் ஒத்துழைக்காததால் பல நல்ல திட்டங்கள் கைமாறின: மோடி குற்றச்சாட்டு
ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.
பவானிபட்னா: ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு ஒடிசா பவானிபட்னா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, எங்களுடன் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு போதிய ஒத்துழைப்பை நல்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் மாநிலங்களின் மேம்பாட்டுக்கு நாங்கள் முழுதாக பணியாற்ற வேண்டியது எங்கள் கடமை.
2014ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்திருந்தால், இந்தியாவிலேயே மிக வேகமாக முன்னேறிய மாநிலங்களுக்கு உதாரணமாக மாறியிருக்கும் என்று மோடி தெரிவித்தார்.
Advertisement