இந்தியா

முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்: பாஜக திட்டம்

DIN


வரும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்துவது குறித்து பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
வரும் தேர்தலில் சுமார் 9 கோடி இளம் வாக்காளர்களிடம் பாஜகவை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கட்சித் தலைவர்களிடம் அடிக்கடி கூறி வருகிறார்.
குறிப்பாக, 2000-01-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த, முதல் முறை வாக்காளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கட்சியினரிடம் அவர் வலியுறுத்தி வருகிறார். கடந்த 2014-ஆம் தேர்தலில் கூட, இளைஞர்களின் ஆதரவால்தான் பாஜக-வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்தலிலும் இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையில், முதல் முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியை வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT