முகப்பு
இந்தியா

திருடன் என்று மோடியை விமர்சித்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Updated On : 15 ஏப்ரல், 2019 at 12:36 PM
பகிர்:

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தனது சொந்த கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல், தவறான கருத்துக்களை பரப்பி நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

எனவே ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.