இந்தியா

விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் கணிப்பு

 நமது நிருபர்

நிகழாண்டில் இயல்பான அளவை ஒட்டிய வகையில் தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்றும், இது விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் வகையில் இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 இந்தியாவில் பொதுவாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். நாட்டின் ஒட்டுமொத்த மழைப் பொழிவில் சுமார் 70-80 சதவீத மழை இந்தப் பருவத்தில் தான் கிடைக்கும் காரணத்தால் தென்மேற்குப் பருவமழை முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் சில பகுதிகளில் சமீப காலமாக மழைக் காலங்களில் அளவுக்கு அதிகமான மழைப் பொழிவு இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கோடி ஏக்கர் அளவிலான பயிர்கள் பாழாகின்றன. அதேவேளையில், சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பருவமழை பொழிவு இல்லாததால், விவசாயிகள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், நிகழாண்டில் இயல்பான அளவில் தென்மேற்குப் பருவமழை பெய்யும் என்றும், இது விவசாயிகளுக்கு நன்மையளிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் ராஜீவன் அளித்த பேட்டி:
 வரும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியவுள்ள தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவை ஒட்டியதாக இருக்கும். அதாவது, 1951-2000 வரையான நீண்ட கால சராசரி அளவு 89 சதவீதமாகும். இந்த சராசரியின் 96 சதவீதம் அளவுக்குப் பெய்யும் எனக் கணித்துள்ளோம். தென்மேற்கு பருவமழை காலத்தில் "எல்நினோவின் தாக்கம் குறைவாக இருக்கும். தென்மேற்குப் பருவமழையின் கடைசிப் பகுதியில் "எல்நினோவின்' தாக்கம் மிகக் குறைந்து காணப்படும். அந்த வகையில், நிகழாண்டில் மிகப் பரவலான அளவில் தென்மேற்குப் பருவமழை இருக்கும். இதனால், நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT