முகப்பு
இந்தியா

‘எல்லா மோடிகளும் திருடர்கள்’: ராகுல் பேச்சுக்கு பிரதமர் கடும் கண்டனம் 

எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஏப்ரல், 2019 at 5:07 PM
பகிர்:

கோர்பா (சட்டீஸ்கர்): எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திங்கள் அன்று தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'ஏன் மோடி என்று பெயர் கொண்டவர்கள் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்?' என்று பேசியிருந்தார். 

இந்நிலையில் எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:

பரம்பரையாக ஆட்சி செய்து வருபவர்கள் இத்தகைய தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு நாகரீகமாகி விட்டது. இப்படித்தான் பேசுவதா? இத்தகைய நபர்களை நாம் விலக்கி வைக்க வேண்டும். மோசமான பேச்சு என்பது அவர்களின் இயல்பாகவே ஆகிவிட்டது.

இந்தப் பகுதியில் உள்ள சஹு இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் குஜராத்தில் மோடி என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் திருடர்களா என்ன?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.